புலமைக்குச் சோதனை

அம்பிகாபதி அமராவதி காதல் விவகாரம் நாளடைவில் அம்பலமானது. குலோத்துங்க சோழ மன்னன் விவரமறிந்து அளவிலாக் கோபமுற்றான். ஒட்டக்கூத்தர் அம்பிகாபதி தண்டனை பெற வேண்டுமென்பதில் முனைப்பாக இருந்ததால் அரசனிடம் அவனது கோபத்தை மேலும் அதிகப்படுத்தும் விதமாகப் பல சட்டதிட்டங்கள், சம்பிரதாயங்கள் முதலியவற்றை எடுத்துக்கூறி நிலைமையை மிகவும் தீவிரமடையச் செய்தார். கம்பரின் வேண்டுதல்கள் எதுவும் மன்னனின் செவியில் ஏறவில்லை. முடிவாக அம்பிகாபதிக்கு ஒரு சோதனை நடத்தி அவன் அதில் வெற்றி பெற்றால் அமராவதியை மணக்கலாம் என்றும், தோலி்யுற்றால் மரண தண்டனை எனவும் முடிவு செய்யப்பட்டது. சோதனை என்னவெனில், ஒரே நாளில், குறிப்பிட்ட நேரரத்துக்குள் சபையோர் முன்னிலையில் நூறு பாடல்களை அம்பிகாபதி தொடர்ந்து இயற்றி அரங்கேற்ற வேண்டும். அற்றில் காமரசம் துளியும் இருக்கக்கூடது. அப்பாடல்களில் பிழை ஏற்பட்டாலோ, காமரசம் கலந்தாலோ, குறிப்பிட்ட காலத்துக்குள் நூறு பாடல்களை இயற்றத் தவறினாலோ தோற்றதாக அர்த்தம்.

இந்த நிபந்தனையை ஏற்று அம்பிகாபதி பாட ஆரம்பித்தான். சபையில் அரசன் உள்ளிட்ட பல அறிஞர்களுடன் கம்பரும், ஒட்டக்கூத்தரும் அமர்ந்திருந்தனர். அமராவதி ஒரு திரைமறைவில் அமர்ந்துகொண்டு நிகழ்ச்சியைக் காண அனுமதிக்கப்பட்டாள். அவள் நூறு மலர்களை ஒரு தட்டில் வைத்துக்கொண்டு அம்பிகாபதி பாடும் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு மலர் வீதம் அருகிலிருந்த மற்றொரு தட்டில் போட்டு, அம்பிகாபதி பாடும் பாடல்கலை எண்ணிக்கொண்டே வந்தாள்.

இவ்வாறு நூறாவது பாடலை எண்ணி முடித்ததும் வெற்றிக் களிப்பில் அமராவதி அம்பிகாபதி இருக்கும் இடத்தை நோக்கி வரவே, பேரழகுடன் விள்ங்கும் அவளைக் கண்டதும் அம்பிகாபதி தன்னை மறந்து,

சற்றே பருத்த தனமே துவளத் தரள வடந்
துற்றே அசையக் குழையூசலாட - துவர்கொள் செவ்வாய்
நற்றேனொழுக நடன சிங்கார நடையழகின்
பொற்றேரிருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே


என்று காமரசம் ததும்பும் பாடலொன்றைக் கூறிவிட்டான். அவன் நூறு செய்யுட்களைப் பாடியிருந்தாலும் அவற்றுள் முதல் செய்யுள் காப்புச் செய்யுளாதலால் அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. ஆகவே அம்பிகாபதி மொத்தம் பாடிய பாடல்கள் 99 மட்டுமே. அமராவதி இதையறியாமல் அவசரப்பட்டுவிட்டாள். ஒட்டக்கூத்தர் இதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். அம்பிகாபதிக்கு மரணதண்டனை தரப்பட்டது. உணர்ச்சி வேகம் அறிவை மழுங்கச் செய்ததனால் வந்த விபரீதத்தின் பலனை அமராவதி அனுபவித்தாள்.

Labels:

கம்பர் பாடக் கலைவாணி வந்தாள்

இட்டவடி நோக..

கம்பர் குலோத்துங்க சோழ மன்னனின் அவைக்களப் புலவராக இருந்தார். மன்னனின் மகள் அமராவதி அம்பிகாபதியின் அழகையும் அவனது கவிதைகளின் மேன்மையையும் கண்டு மயங்கி அவனைத் தன் இதயத்தில் வரித்தாள். அதைத்தொடர்ந்து அம்பிகாபதியும் மராவதியும் ஒருவரின் மேல் ஒருவர் தீராத உண்மைக்காதல் கொண்டனர்.

இவர்கள் இருவரின் காதலும் குலோத்துங்க சோழ மன்னனின் குருவும் அவைக்களப் புலவருமான கவி ஒட்டக்கூத்தருக்குத் தெரியவந்தது. அசல் வாழ்ந்தால் ஆறு மாதம் பட்டினி கிடக்கும் குணம் கொண்ட அவர் இவர்களுக்கு தண்டனை கிடைக்கச் செய்ய சமயம் பார்ததுக் காத்டதிருந்தார்.

ஒரு முறை கம்பரும் அம்பிகாபதியும் அரசனுடன் அளவளாவிக்கொண்டிருக்கையில் அவர்கள் இருவருக்கும் அருந்த பானம் எடுத்து வருமாறு மன்னன் அமராவதியிடன் சொல்ல, அதன்படி அவளும் அவர்களிருவருக்கும் ஒரு தட்டில் பானம் எடுத்துக்கொண்டு வந்தாள். அமராவதியின் நடையழகில் மனடதைப்பறிகொடுத்த அம்பிகாபதி தன்னையுமறியாமல்

இட்டவடி நோக எடுத்த அடி கொப்பளிக்க
வட்டில் சுமந்து மருங்கசைய


என்று பாட ஆரம்பித்துவிட்டான். அப்போது ஒட்டக்கூத்தரும் உடனிருந்தார்.

அங்கிருந்த ஆபத்தான சூழ்நிலையைப் புரிந்துகொண்ட கம்பர் சட்டென்று இடைமறித்து

கொட்டிக் கிழங்கோ கிழங்கென்று கூவுவாள் நாவில்
வழங்கோசை வையம் பெறும்


என்று பாடலை முடித்தார்.

கம்பரின் சமாளிப்பை ஒட்டக்கூத்தர் ஏற்றுக்கொள்ளவில்லை. கம்பர் கலைவாணியை மனதில் தியானித்தார். அன்னை கலைவாணி கம்பருக்கருள் புரிய ஒரு மூதாட்டியாக உருவெடுத்து அரண்மனை வாசல் வழியாக ஒரு கூடையைத் தலையில் வைத்துக்கொண்டு "கொட்டிக்கிழங்கோ கொட்டிக்கிழங்கு" என்று கூவியபடியே வந்தாள். அரசன் ஆணைப்படி சேவகர்கள் அவளை உள்ளே அழைத்து வர, அம்மூதாட்டி கூடையிலிருக்கும் கிழங்குகளைக் காட்டி வேண்டுமா? என்று கேட்டாள். கலைவாணியின் அருளால் அப்போதைக்கு அம்பிகாபதியின் தலை தப்பியது.

Labels:

ஏத்தக்காரன் பாட்டுக்கு எதிர்ப் பாட்டில்லை

அறிமுகம்

அம்பிகாபதி - அமராவதி காதல் கதை அனேகமாகத் தமிழ் மக்கள் அனைவரும் அறிந்த ஒன்று. கவிச்சக்கரவர்த்தி கம்பரின் ஒரே மகன் அம்பிகாபதி. கம்பன் வீட்டுக் கட்டுத்தரியும் கவிபாடும் என்று பரவலான கருத்து தமிழ் மக்கள் அனைவரிடயேயும் நிலவுகையில் அம்பிகாபதியைப் பற்றிக் கேட்க வேண்டுமா?

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்

என்பார்கள் நம் முன்னோர்கள். இதன்பொருள் நம்மை விட நமது வாரிசுகள் அதிக அறிவு படைத்தவர்களாய் விளங்குவர் என்பதாகும்.

தம்மில் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்தில்
மன்னுயிர்கட் கெல்லா மினிது


எனும் குறளின்படி கம்பரும் தன் மகன் அம்பிகாபதி கவிதை புனைவதில் தன்னிலும் வல்லவனாயிருப்பது குறித்து அளவிலா மகிழ்வு கொண்டிருந்தார். கம்பர் ஒருநாள் ஒரு வயல்வெளியில் உலாவச்செல்கையில் அங்கு ஒருவன் ஏற்றமிரைத்து வயலுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டிருக்கக் கண்டார்.

ஏற்றமென்றால் ஒரு அகண்ட வாயுள்ள பாத்திரம். அதன் அடியில் ஒரு துளையிட்டு, அதில் கனமான துணியாலான, வளையும் தன்மையுள்ள ஒரு குழாய் இணைக்கப்பட்டிருக்கும். மூன்று சிறு கயிறுகளால் அப்பாத்திரம் வயலருகிலிருக்கும் கிணற்றின் உருளையின் மேல், உருளை உருளுகையில் நர்ந்து செல்லக்கூடிய நீளமான நீரிரைக்கும் கயிற்றின் ஒரு முனையுடன் இணக்கப் பட்டிருக்கும். நீரிரைக்கும் கயிற்றின் மற்றொரு முனை ஒரு மாட்டின் கழுத்திலோ அல்லது இரண்டு மாடுகளின் கழுத்துகளிலோ பொருத்தப்பட்ட மரக்கட்டையுடன் கட்டப்பட்டிருக்கும். மாடு கிணற்றை நோக்கிப் பின்னோக்கி நடக்கையில் பாத்திரம் கிணற்று நீருக்குள் அமிழ்த்தப்பட்டு அதில் நீர் நிறையும். அதன்பின்னர் மாடு முன்னோக்கி கிணற்றை விட்டு விலகும் திசையில் நடக்கையில் நீர் நிரம்பிய பாத்திரம் கிணற்றிம் மேல்மட்டத்திற்கு வந்து அதிலுள்ள நீர் துணியாலான குழாய் வழியே வயலுக்குச் செல்லும் ஒரு சிறு கால்வாயில் கொட்டும்.

அக்காலத்தில் பம்ப் போன்ற இயந்திரங்கள் இல்லையாதலால் ஏற்றமிரைத்தே வயலுக்கு நீர் பாய்ச்ச வேண்டும். இவ்வாறாக ஏற்றமிரைத்துக்கொண்டிருந்த ஏற்றக்காரன்

மூங்கிலிலை மேலே,, மூங்கிலிலை மேலே ...

என்று இரு வார்த்தைகளை மட்டும் இசையுடன் மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டே ஏற்றமிரைத்தான். அக்காலத்தில் மட்டுமன்றி இக்காலத்திலும் வயலில் பணிபுரிபவர்கள் அவர்கள் செய்யும் பணியைக் குறிக்கும் ஒரு நாட்டுப்புறப் பாடலை ஒன்று சேர்ந்து பாடிக்கொண்டே பணிபுரிதல் வழக்கம். அவ்வாறு பாடிக்கொண்டே பணி செய்கையில் களைப்புத் தெரியாது. இதைத்தான்

ஆடிப்பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காது அதில்
ஆணும் பெண்ணும் சேராவிட்டா அழகிருக்காது ..


எனும் பின்னாளில் வந்த திரைப்படல் ஒன்று பண்ணோடு எடுத்துரைக்கிறது.

கம்பர் ஏற்றக்காரன் பாடிய நாட்டுப்புறப் பாடலை அதன் முன்னர் கேட்டாறியாதவராதலால் அவ்விரு வார்த்தைகளையே அடிக்கடி திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தார். அவர் இவ்வாறு கூறக்கேட்ட அம்பிகாபதி

மூங்கிலிலை மேலே துங்கு பனி நீரே

என்று பாடலின் வரியைப் பூர்த்தி செய்யவே, கம்பர் அகமிக மகிழ்ந்து,

"ஏற்றக்காரன் பாட்டுக்கெதிர் பாட்டில்லை,
என் அம்பிகாபதிக்கு நிகர் யாருமில்லை"


என்று பாராட்டி மகிழ்ந்தார்.

மூங்கிலிலை மேலே தூங்குபனி நீரே
தூங்கு பனி நீரை வாங்கும் கதிரோனே


என்று தொடங்கும் ஒரு அருமையான திரைப்படப் பாடலொன்றை கவிஞர் கண்ணதாசன் இதிலிருந்து எழுதியுள்ளார்.

(தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயுமல்லவா?) கவிச் சக்கரவர்த்திக்கு நம் தமிழ்க் கவிஞர்கள் அனைவரும் வாரிசுகளல்லவா?

தொடரும்........

Labels: