கம்பர் பாடக் கலைவாணி வந்தாள்

இட்டவடி நோக..

கம்பர் குலோத்துங்க சோழ மன்னனின் அவைக்களப் புலவராக இருந்தார். மன்னனின் மகள் அமராவதி அம்பிகாபதியின் அழகையும் அவனது கவிதைகளின் மேன்மையையும் கண்டு மயங்கி அவனைத் தன் இதயத்தில் வரித்தாள். அதைத்தொடர்ந்து அம்பிகாபதியும் மராவதியும் ஒருவரின் மேல் ஒருவர் தீராத உண்மைக்காதல் கொண்டனர்.

இவர்கள் இருவரின் காதலும் குலோத்துங்க சோழ மன்னனின் குருவும் அவைக்களப் புலவருமான கவி ஒட்டக்கூத்தருக்குத் தெரியவந்தது. அசல் வாழ்ந்தால் ஆறு மாதம் பட்டினி கிடக்கும் குணம் கொண்ட அவர் இவர்களுக்கு தண்டனை கிடைக்கச் செய்ய சமயம் பார்ததுக் காத்டதிருந்தார்.

ஒரு முறை கம்பரும் அம்பிகாபதியும் அரசனுடன் அளவளாவிக்கொண்டிருக்கையில் அவர்கள் இருவருக்கும் அருந்த பானம் எடுத்து வருமாறு மன்னன் அமராவதியிடன் சொல்ல, அதன்படி அவளும் அவர்களிருவருக்கும் ஒரு தட்டில் பானம் எடுத்துக்கொண்டு வந்தாள். அமராவதியின் நடையழகில் மனடதைப்பறிகொடுத்த அம்பிகாபதி தன்னையுமறியாமல்

இட்டவடி நோக எடுத்த அடி கொப்பளிக்க
வட்டில் சுமந்து மருங்கசைய


என்று பாட ஆரம்பித்துவிட்டான். அப்போது ஒட்டக்கூத்தரும் உடனிருந்தார்.

அங்கிருந்த ஆபத்தான சூழ்நிலையைப் புரிந்துகொண்ட கம்பர் சட்டென்று இடைமறித்து

கொட்டிக் கிழங்கோ கிழங்கென்று கூவுவாள் நாவில்
வழங்கோசை வையம் பெறும்


என்று பாடலை முடித்தார்.

கம்பரின் சமாளிப்பை ஒட்டக்கூத்தர் ஏற்றுக்கொள்ளவில்லை. கம்பர் கலைவாணியை மனதில் தியானித்தார். அன்னை கலைவாணி கம்பருக்கருள் புரிய ஒரு மூதாட்டியாக உருவெடுத்து அரண்மனை வாசல் வழியாக ஒரு கூடையைத் தலையில் வைத்துக்கொண்டு "கொட்டிக்கிழங்கோ கொட்டிக்கிழங்கு" என்று கூவியபடியே வந்தாள். அரசன் ஆணைப்படி சேவகர்கள் அவளை உள்ளே அழைத்து வர, அம்மூதாட்டி கூடையிலிருக்கும் கிழங்குகளைக் காட்டி வேண்டுமா? என்று கேட்டாள். கலைவாணியின் அருளால் அப்போதைக்கு அம்பிகாபதியின் தலை தப்பியது.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home